» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: விஜய் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஜூலை 2025 12:29:36 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை த.வெ.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை சந்திக்க த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. த.வெ.க. சார்பாக 'மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். செயலியை தொடங்கி வைத்தப்பின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை முன்னெடுப்பையும் விஜய் இன்று தொடங்கிறார். குடும்பம் குடும்பமாக பொதுமக்களை தவெகவின் உறுப்பினர்களாக இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என திமுக உறுப்பினர் சேர்க்கை நடத்தும் நிலையில் தவெகவும் முன்னெடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்விரோதத்தில் வாலிபரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
வியாழன் 31, ஜூலை 2025 8:56:56 AM (IST)

முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு : சிறுவனுக்கு போலீசார் பாராட்டு!
வியாழன் 31, ஜூலை 2025 8:46:42 AM (IST)

பாஜக மாநில துணைத் தலைவர்களாக குஷ்பு, சசிகலா புஷ்பா உட்பட 14பேர் நியமனம்!
புதன் 30, ஜூலை 2025 5:52:53 PM (IST)

பழைய குற்றாலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழப்பு!
புதன் 30, ஜூலை 2025 5:36:49 PM (IST)

பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது!
புதன் 30, ஜூலை 2025 5:07:58 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு
புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)
