» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு : சிறுவனுக்கு போலீசார் பாராட்டு!
வியாழன் 31, ஜூலை 2025 8:46:42 AM (IST)

நாசரேத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை, காப்பாற்றிய சிறுவன் சிவபாலுவை போலீசார் பாராட்டி பரிசு வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில் ரோடு மணிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். அவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு சிவபாலு (14) என்ற மகன் உள்ளார். சிவபாலு சம்பவத்தன்று காலையில் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையோரம் உள்ள முட்புதருக்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த சிவபாலு குழந்தையின் சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்து சென்று பார்த்தான்.
அப்போது முட்புதருக்குள் வெறும் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கதறி அழுதுக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். துரிதமாக செயல்பட்ட சிவபாலு முட்புதருக்குள் சென்று குழந்தையை தன் கையில் எடுத்தான். சிறிதும் தாமதிக்காமல் குழந்தையை கையில் ஏந்தியவாறு ஊருக்குள் ஓடிச்சென்றான்.
அங்கிருந்த அக்கம்பக்கத்தினரிடம் குழந்தையை காட்டி நடந்த விவரத்தை கூறினான். இதுகுறித்து தகவலறிந்ததும் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி விரைந்து வந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்தபோது, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தைரியமாக முட்புதருக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய சிவபாலு மற்றும் அவனுடைய பெற்றோரையும் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பாராட்டி பரிசு வழங்கினார்.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் காப்பக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்து சிலமணி நேரமே ஆகியிருப்பதால் அதிகாலை நேரத்தில் இங்கு வந்து யாரேனும் வீசியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? அல்லது வேறு பகுதியில் பெற்றோரிடம் இருந்து கடத்தப்பட்டு இங்கு கொண்டுவந்து வீசப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவுடனான உறவு முறிவு: முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்
வியாழன் 31, ஜூலை 2025 5:32:08 PM (IST)

தூத்துக்குடியில் ஆக.2ஆம் தேதி மாபெரும் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!!
வியாழன் 31, ஜூலை 2025 5:08:39 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
வியாழன் 31, ஜூலை 2025 5:03:41 PM (IST)

நெல்லையில் ரூ.2.53 கோடி நலத்திட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வெ.ஆறுச்சாமி வழங்கினார்
வியாழன் 31, ஜூலை 2025 4:57:47 PM (IST)

அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும்: குஷ்பு கருத்து!
வியாழன் 31, ஜூலை 2025 4:50:56 PM (IST)

விளாத்திகுளத்தில் ரூ.1.83 கோடியில் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்
வியாழன் 31, ஜூலை 2025 4:36:05 PM (IST)
