» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விளாத்திகுளத்தில் ரூ.1.83 கோடியில் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

வியாழன் 31, ஜூலை 2025 4:36:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) அசோகன், விளாத்திகுளம் சார்பதிவாளர் ஆதிலெட்சுமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory