» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டிஆர்பி ராஜா
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:15:17 PM (IST)
ஆட்டோமொபைல் உலகத்தில் தூத்துக்குடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி உள்ளது. எங்கு சென்றாலும் கட்டமைப்பு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இருக்கிறதே ஆகையால் படித்த இளைஞர்கள், குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. உலகத் திறமை வாய்ந்த உற்பத்தியாளர்கள் இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் வருகிறார்கள்.
பல நாடுகளில் இந்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லை என்று முதலீட்டாளர்கள் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் மிகவும் எளிதாக வர்த்தகம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்திய முழுவதும் தென் தமிழ்நாட்டில் மகத்தான வளர்ச்சி வர வேண்டும் என்ற வகையில் ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்தார்.
தொழில்துறையின் வட தமிழ்நாடு எப்படி உயர்ந்த இருக்கிறதோ, அதையும் மேற்கு மண்டலத்திற்கும், டெல்டா மாவட்டத்திற்கும், தென் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பல தொழில் வளர்ச்சியை கொண்டுவர முதலமைச்சர் கூறினார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்த முடிவு செய்து கோவை நடத்தப்பட்டது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு உலக தரத்திற்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்சாலை மையமாகவே மாறி வருகிறது.
நாட்டில் தொழில் வளர்ச்சி தூத்துக்குடியில் முதல் டிஎன் ரைசிங் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 22 ஒப்பந்தங்களில் 32,282 கோடி பெரு நிறுவனங்கள் தொழில்துறை சார்பாக பொருந்தும் ஒப்பந்தங்கள் செய்துள்ளனர். 48 ஆயிரத்து 689 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன தென் தமிழகத்திற்கு மட்டும் 30 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளனர் 46 ஆயிரத்து 450 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை வரை வேலை வாய்ப்புகள் உருவாகும். சிறுகுறு நடுத்தர தொழில் தினங்கள் 1261 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் புரிந்து நாம் செய்யப்பட்டு உள்ளன. இன்னும் பல கோடி ரூபாய் முதலீடுகள் இன்னும் முடிவு செய்யப்படும். தென் தமிழகத்திற்கு முதலீடுகள் வரும்போது இங்கேயோ வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பதை முதலீட்டின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிபந்தனை என்றார்.
நான் முதல்வன் திட்டத்தில் 350 பேருக்கு பயிற்சி அளித்து அதில் 250 பேருக்கு மின் பாஸ் நிறுவனத்தில் பயிற்சி வேலை வழங்கப்பட்டுள்ளது. முதலீடு ஒரு பகுதியில் வரும்போது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதை திமுக அரசின் இலக்கு. கப்பல் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி வர இருக்கிறது. உங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் பல்வேறு
விண்வெளி கட்டுமானத் தொழில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பதில் மிகப்பெரிய விண்வெளி செக்டார் வர இருக்கிறது. இந்தியாவில் தூத்துக்குடியில் தான் முதன்முறையாக எலக்ட்ரானிக்ஸ் துறையில் பிசிபி லேமினேஷன் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எங்கு எது தேவையோ அதற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:19:40 PM (IST)

சகோதரர்கள் 3 பேரை கொலை செய்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் : தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 7:55:59 PM (IST)

நடிகை மீரா மிதுனை கைது செய்ய வேண்டும்: மத்திய குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:37:51 PM (IST)

கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:43:18 PM (IST)

ஒரு ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் முழுவதும் இலவசம் : பி.எஸ்.என்.எல். சுதந்திர தின அதிரடி ஆஃபர்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 12:52:35 PM (IST)

யாருக்கு ?Aug 4, 2025 - 05:58:12 PM | Posted IP 104.2*****