» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் ஆக.2 முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
புதன் 30, ஜூலை 2025 4:31:20 PM (IST)
தமிழ்நாட்டில் ஆக.2 முதல் 5-ம்தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 1-ம்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 2-ம்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 3-ம்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 4-ம்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 5-ம்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 31, ஜூலை 2025 12:16:57 PM (IST)

முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனம் : போராட்டம் நடத்த அதிமுக முடிவு!!
வியாழன் 31, ஜூலை 2025 11:54:35 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வியாழன் 31, ஜூலை 2025 11:39:04 AM (IST)

ஆணவக் கொலை வழக்கில் கைது செய்வதில் தயக்கம் ஏன்..? திருமாவளவன் கேள்வி
வியாழன் 31, ஜூலை 2025 11:35:19 AM (IST)

ஆணவக் கொலை: கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல்!!
வியாழன் 31, ஜூலை 2025 11:24:09 AM (IST)

தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
வியாழன் 31, ஜூலை 2025 11:04:13 AM (IST)
