» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆணவக் கொலை வழக்கில் கைது செய்வதில் தயக்கம் ஏன்..? திருமாவளவன் கேள்வி
வியாழன் 31, ஜூலை 2025 11:35:19 AM (IST)
நெல்லையில் கவின் ஆணவக் கொலை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. சுர்ஜித், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்? சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:19:40 PM (IST)

சகோதரர்கள் 3 பேரை கொலை செய்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் : தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 7:55:59 PM (IST)

நடிகை மீரா மிதுனை கைது செய்ய வேண்டும்: மத்திய குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:37:51 PM (IST)

தூத்துக்குடி அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டிஆர்பி ராஜா
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:15:17 PM (IST)

கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:43:18 PM (IST)
