» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனம் : போராட்டம் நடத்த அதிமுக முடிவு!!
வியாழன் 31, ஜூலை 2025 11:54:35 AM (IST)
தூத்துக்குடியில் முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மேற்கு ஒன்றிய அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.பி.தளவாய்புரம் சுப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கே.பி.தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக 6 தலைமுறையாக குடியிருந்து வருகிறனர். இந்த கிராமத்தில் இந்திய இராணுவத்தில் 200 பேருக்கு மேல் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
விவசாய தொழிலை நம்பி உள்ள கிராமத்தை முழுமையாக ஒரு தனியார் நிறுவனம் 2022 ம் ஆண்டு முதல் போலியாக ஆவணம் தயார் செய்து, முறைகேடாக பத்திரபதிவு செய்துள்ளது. இதனால் தற்போது கேபி தளவாய்புரம் ஊர் முழுவதும் ஈசியில் டெல்லி உச்சநிதிமன்றம் என்று பதிவு ஆகியுள்ளது. இதனை ஊர் பொதுமக்கள் சார்பாக பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஊர் பொதுமக்கள் போராட்டக் களத்திற்கு தள்ளி விடப்பட்ட சூழலில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இறுதி முயற்சியாக இது குறித்து ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு சட்டம் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாத்தது போல, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்டு தீர்வு காண ஊர் மக்கள் முடிவு செய்து இருந்த நிலையில்,
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற 2026 தமிழக சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக அவர் நேரடியாக மக்களை சந்திக்க வருகிற 1ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தால், அவரை பொதுமக்கள் நேரில் சந்தித்து முறையிட உள்ளனர், இந்த நிலையில் பொது மக்களின் குமுறலுக்கு தீர்வு காண அதிமுக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனத்தின் நில அபகரிப்பு செயலைக் கண்டித்து போராட்டம் நடத்த அதிமுக பொதுச்செயலாளரின் அனுமதியை பெற்று ஊர் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:19:40 PM (IST)

சகோதரர்கள் 3 பேரை கொலை செய்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் : தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 7:55:59 PM (IST)

நடிகை மீரா மிதுனை கைது செய்ய வேண்டும்: மத்திய குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:37:51 PM (IST)

தூத்துக்குடி அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டிஆர்பி ராஜா
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:15:17 PM (IST)

கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:43:18 PM (IST)
