» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவின் கொலை வழக்கு : காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது; காவல் ஆய்வாளர் மீதும் புகார்

வியாழன் 31, ஜூலை 2025 10:52:43 AM (IST)



நெல்​லை​யில் ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் கொல்​லப்​பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகிய இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இருப்பினும், இருவரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வகணேஷின் உடலை வாங்​கு​வோம் என உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட சுர்​ஜித், குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் நெல்லை மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல் ஆய்வாளர் மீதும் புகார்

இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.

காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். காசி பாண்டியன் காவல் ஆய்வாளர் இல்லை, கூலிப்படை தலைவன். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை மிரட்டியது போல் 2023-ல் பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் கொலையிலும் காசிபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory