» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது!

புதன் 30, ஜூலை 2025 5:07:58 PM (IST)

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது. மதிய வேளையில் தனியான இருந்ததால் பேச்சு கொடுத்து பெண்ணிடம் கைவரிசை காட்டியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory