» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் எங்கும் மழைநீர் தேங்காது : மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

வியாழன் 31, ஜூலை 2025 3:31:30 PM (IST)

May be an image of 7 people, people studying, dais and text that says

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் எங்கும் மழைநீர் தேங்காது என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டஅரங்கில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் பானோத் ம்ருகேந்தா்லால், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி 4 மண்டலங்கள் பகுதிகளிலும் குறைதீர்க்கும் முகாம் மூலம் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டது. மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றி வருகிறோம். குடிநீர் சீராக வழங்கப்பட்டுள்ளது ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளது. புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. 

2008ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஸ்டாலின் பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கி வைத்தார். 2024ம் ஆண்டு மேலும் பல வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்துள்ளது. சில வாா்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரண்டு மாதத்திற்குள் குடிநீர் பிரச்சனை முழுவதும் தீர்ந்துவிடும். பல வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் சப்ளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

சண்முகபுரம் குருஸ்புரம் மில்லர்புரம் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் சில பிரச்சினைகள் உள்ளது அதற்கு தீர்வுகானும் பணிகள் நடைபெற்று வருகிறது. 20 நாட்களுக்குள் அதை சரி செய்யப்பட்டு விடும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் டபிள்யுஜிசி ரோடு, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து விவிடி சிக்னல் வரை ரோடு அமைக்கப்பட உள்ளது. அதிமுக ஆட்சியில் குடிநீர் சரியான முறையில் பராமரிக்காத காரணத்தால் குடிதண்ணீர் பத்து ஆண்டுகளாக மக்களுக்கு சரியாக வழங்கவில்லை. சில இடங்களில் பழைய குடிதண்ணீா பைப் லைன் ஒன்பது அடிக்கு கீழ் உள்ளதால் பணிகள் நடைபெறுவதில் சில சிரமங்கள் ஏற்படுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பெறப்படுகின்ற மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. நலம் காக்க முதலமைச்சரின் திட்டம் வருகிற இரண்டாம் தேதி தூத்துக்குடி மாநகரில் மூன்று இடத்தில் நடைபெறுகிறது. இரண்டாம் தேதி சென்மேரிஸ் பள்ளியில் நடைபெறுகிறது. 60 வார்டுகளில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் தகவலை தெரிவித்து 30 வகையான நோய்களுக்கு மருத்துவம் பார்க்கலாம். சிறப்பு டாக்டர்கள் அங்கு பணியில் இருப்பார்கள். 

இது வரை மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரம் சாலைகள் அமைக்கப்பட்டு 90 சதவீதம் பணிகள் நிைறவு பெற்றுள்ளன. வரும் காலங்களில் மாநகராட்சி பகுதியில் புதிதாக 974 சாலைகள் 60 வார்டு பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ளது. ஓன்றன் பின் ஓன்றாக பல பணிகள் நடைபெறும். பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியும் நடைபெறவுள்ளது. மழைகாலத்தில் தண்ணீர் எந்த பகுதியிலும் தேங்காது யாரும் பயப்பட வேண்டாம், மாநகராட்சி பகுதி முழுவதும் சிறு குறு தெருக்களுக்கும் ஏற்றாா் போல் தாா்சாலை பேவா் பிளாக் சாலை அமைக்கப்படும். பழைய கால்வாய்கள் சில பகுதிகளில் உயா்த்தப்படும் என்றாா்.

பின்னர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து வாசிக்கப்பட்டு 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் கவுன்சிலா்கள் தங்களது பகுதியில் உள்ள கோாிக்கைகளை நிறைவேற்றியதற்கு நன்றி தொிவித்தும் பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து மேயா் ஆணையாிடம் கோாிக்கை மனுக்களை வழங்கினர்.

கூட்டத்தில் பொறியாளர் தமிழ்ச்செல்வன். உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் கல்யாணசுந்தரம், வெங்கட்ராமன், பாலமுருகன், நகர அமைப்பு உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, ராமசந்திரன், முனீர் அகமது, நகா் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், ராஜசேகா், ராஜபாண்டி, மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, கவுன்சிலா்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, சுரேஷ்குமாா், கனகராஜ், விஜயகுமாா், சரவணக்குமாா், முத்துவேல், இசக்கிராஜா, கண்ணன், பட்சிராஜ், ராஜதுரை, வைதேகி, சுப்புலட்சுமி, சரண்யா, நாகேஸ்வாி, ஜெயசீலி, சோமசுந்தாி, அதிஷ்டமணி, ாிக்டா, பவாணி, காங்கிரஸ் கவுன்சிலா்கள் சந்திரபோஸ், எடிண்டா, கம்யூனிஸ்ட் கவுன்சிலா்கள் தனலட்சுமி, முத்துமாாி. இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மதிமுக கவுன்சிலர் ராமு அம்மாள், அதிமுக கவுன்சிலா்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து

ஏரியா காரன்Jul 31, 2025 - 09:29:44 PM | Posted IP 172.7*****

இப்போ சேதமடைந்த சிமெண்ட் சாலைகள் சிறு கற்கள் பெயர்ந்து வருகிறது அதையும் கவனிங்க , சிமெண்ட் சாலையில் மண் தேங்காமல் இருக்க மெஷின் வாங்கி வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory