» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவினை பெண் கேட்க வருமாறு சகோதரர் சுர்ஜித் அழைத்தார் : சுபாஷினி விளக்கம்

வியாழன் 31, ஜூலை 2025 4:10:16 PM (IST)

கவினும் நானும் உயிருக்கு உயிராக காதலித்தோம், யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று  கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டுள்ளார். 

நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கவினும் நானும் உயிருக்கு உயிராக காதலித்தோம். காதலிக்கிறாயா என எனது அப்பா கேட்டார். அப்போது இல்லை என கூறிவிட்டேன்.

செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன். அப்பாகிட்ட சுர்ஜித் இந்த தகவலை சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டார். சகோதரர் சுர்ஜித்துக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் தந்தையிடம் கூறிவிட்டார், அவர் கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.

சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான். உங்கள் திருமணம் முடிந்தால்தான் எனது வாழ்க்கையை திட்டமிட முடியும் எனக்கூறி சுர்ஜித் அழைத்துள்ளான். கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வருமாறு சகோதரர் சுர்ஜித் கூறியது வீட்டிற்கு வந்து பேசும்போது தான் தெரிந்தது.

அதன்பின்னர் கவினுக்கும் சுர்ஜித்தும் இடையில் என்ன விதமாக பேச்சுவார்த்தை நடந்தது எனத் தெரியவில்லை. 28-ந்தேதி மாலையில் தான் அவனை வரச்சொல்லி இருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இஷ்டத்திற்கு யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory