» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொடைக்கானலில் 6வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு
வியாழன் 31, ஜூலை 2025 3:51:35 PM (IST)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மது இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் சென்டர் சார்பாக 6-வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு வெ.பரத் தலைமையில் நடைபெற்றது.
நீதிபதி சேகர், மாவட்ட கல்வி ஆய்வாளர் ஓய்வு அமுதா, நேச்சுரோபதி. சுபிதா, வைத்தியநாதன், லக்ட்சயா, எம்.ஐ.எம்.எஸ் இயக்குநர் க.சேதுசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மருத்துவர் ஆரோக்கியபழம் வரவேற்புரையாற்றினார். எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றிய புதிய புத்தகம் நீதிபதி சேகர் எம்.ஐ.எம்.எஸ், மாணவர்களின் சார்பாக வெளியிட, எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனத்தின் சேர்மன் வெ.பரத் பெற்றுக்கொண்டார். நீதிபதி சேகர், அமுதா பொதுநல சேவையைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் பரத் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனமானது கடந்த 7 வருடங்களாக எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை மத்திய சுகாதாரத்துறையின் அனுமதியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது. கொரோனா தொற்று காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சையளித்தது மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு இம்யூனிட்டி பூஸ்டரும் வழங்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை பெற்றது. இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை சரியான பாதையில் எம்.ஐ.எம்.எஸ் எடுத்து செல்கிறது. இந்த மருத்துவத்திற்கு மத்திய மாநில சுகாதாரத்துறையில் முறையான அங்கீகாரம் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம்.
பக்கவிளைவுகள் இல்லாத எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவம் ஆராய்ச்சியோடு மட்டுமில்லாமல் முறையான அங்கீகாரம் கிடைத்தால் பல்வேறு மக்கள் பலனடையலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கவனத்திற்கும் இந்த மருத்துவத்தை பற்றி எடுத்து கூறியிருக்கிறோம். விரைவாக இந்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார். மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். முடிவில் யூசப் மௌலானா ஆம்புரோஸ் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:19:40 PM (IST)

சகோதரர்கள் 3 பேரை கொலை செய்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் : தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 7:55:59 PM (IST)

நடிகை மீரா மிதுனை கைது செய்ய வேண்டும்: மத்திய குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:37:51 PM (IST)

தூத்துக்குடி அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டிஆர்பி ராஜா
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:15:17 PM (IST)

கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:43:18 PM (IST)
