» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழைய குற்றாலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழப்பு!
புதன் 30, ஜூலை 2025 5:36:49 PM (IST)
பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் உயிரிழந்தனர். மேலும் 8பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சார்ந்த யாஸ்மின் (53) என்பவர் காலையில் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன் (60), மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 2ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவினை பெண் கேட்க வருமாறு சகோதரர் சுர்ஜித் அழைத்தார் : சுபாஷினி விளக்கம்
வியாழன் 31, ஜூலை 2025 4:10:16 PM (IST)

கொடைக்கானலில் 6வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு
வியாழன் 31, ஜூலை 2025 3:51:35 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் எங்கும் மழைநீர் தேங்காது : மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
வியாழன் 31, ஜூலை 2025 3:31:30 PM (IST)

தூத்துக்குடியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 31, ஜூலை 2025 12:16:57 PM (IST)

முழு கிராமத்தையும் அபகரிக்க நினைக்கும் தனியார் நிறுவனம் : போராட்டம் நடத்த அதிமுக முடிவு!!
வியாழன் 31, ஜூலை 2025 11:54:35 AM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வியாழன் 31, ஜூலை 2025 11:39:04 AM (IST)
