» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக மாநில துணைத் தலைவர்களாக குஷ்பு, சசிகலா புஷ்பா உட்பட 14பேர் நியமனம்!

புதன் 30, ஜூலை 2025 5:52:53 PM (IST)

தமிழக பாஜகவில் குஷ்பு, சக்ரவர்த்தி, கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா உள்பட 14 பேர் மாநில துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை "பாஜக தேசிய தலைவர் நட்டாவின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மாநில துணைத் தலைவர்களாக எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என். சுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுச் செயலாளர்களாக.. பாலகணபதி, ராம ஸ்ரீநிவாசன், எம். முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.. மாநில பொருளாளராக.. எஸ்.ஆர். சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.. மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அலுவலக செயலாளராக எம்.சந்திரனும், மாநில தலைமை செய்தி தொடர்பாளராக நாராயணன் திருப்பதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory