» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு

புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் இன்று (30.07.2025) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி டவுண் செண்பகப்பிள்ளை தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு சிமெண்ட் குழாய் பதித்து, சாலையில் கான்கிரீட் போடும் பணியினையும், நயினார் குளம் பகுதியில் சாலை அமைக்கப்படவுள்ள பகுதியினையும், நெல்லையப்பர் கோவில் வடக்கு, மேற்கு ரத வீதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மானூர் ஊராட்சி ஒன்றியம் வல்லவன்கோட்டை முதல் நரியூத்து செல்லும் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், மேலபாலாமடை முதல் காட்டாம்புளி வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தாழையூத்து நாஞ்சான்குளம் ரஸ்தா செல்லும் சாலை 1.8 கி.மீ சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், தச்சநல்லூர் முதல் தாழையூத்து வரை சாலை அமைக்கப்படவேண்டிய இடத்தினையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சி பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, சாலை பணிகளை தரமானதாகவும் குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திடவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் , உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, கோட்டப்பொறியாளர் ராஜசேகர் , உதவி கோட்டப்பொறியாளர் சண்முகநாதன் , உதவி பொறியாளர் அன்பரசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory