» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி: திருவண்ணாமலை கோவிலில் தரிசனம்!

புதன் 30, ஜூலை 2025 12:19:47 PM (IST)

வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் வரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். கடந்த சனிக்கிழமை தமிழகத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்துக்கு வருகைதரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார். மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். மேலும், செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory