» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

புதன் 30, ஜூலை 2025 11:37:06 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம், தெற்கு தெருவை சேர்ந்த முகமது செய்யது அலி மகன் முகமதுகெளசர் (23), பக்கிர்மைதீன் மகன் சதாம்உசேன்(25), நாகூர்மீரான் மகன்களான அசார்மைதீன்(20), முகமதுசேக் அபுதாஹிர்(22) ஆகியோர் பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிகள் ஆவர்.

இவர்கள் மீது திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் நேற்று (29.7.2025) மேற்சொன்ன 4 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory