தமிழ்நாடு

Browse content

நெல்லையில் 'விதைப்பந்து மழை': மாணவிகள் தயாரித்த 4.5 லட்சம் விதைப்பந்துகள் விதைப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தைப் பசுமையாக்கும் நோக்கில், பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வெண்ட் பள்ளி மாணவிகள் தயாரித்த 4.5 லட்சம் விதைப்பந்துகளை மாவட்டத்தின் முக்கியச் சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் வீசும் 'விதைப்பந்து மழை' நிகழ்வு நடைபெற்றது.

கடற்கரையில் நிறுத்திய 2 பைபர் படகுகளுக்கு தீ வைப்பு: ரூ.50 லட்சம் சேதம் - மீனவர்கள் வேதனை!

குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைபர் படகுகளுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு: முதல்வர் விஜய், மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயில் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனிநபர் துதி பாடத் தடை: கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனிநபர் துதி பாடத் தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை - கோவை - தூத்துக்குடி இடையே புதிய தொழில்வழித்தட விரைவுச்சாலை: ஆய்விற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை 'மாஸ்டர் பிளான் 2036' தொலைநோக்குத் திட்டத்தைத் தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் அரசியல் கோஷம் : மதுரை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கல்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் 'அரோகரா' கோஷமிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இருவரை ஏமாற்றித் திருமணம் செய்த இளம்பெண்ணின் தாய் கைது; தந்தை, மகளுக்கு போலீசார் வலைவீச்சு!

தாய், தந்தை உதவியுடன் அடுத்தடுத்து இருவரை ஏமாற்றித் திருமணம் செய்து நகை மற்றும் பணம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணின் தாயை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 30 நாட்களில் 16 கொலைகள்: சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - கீதா ஜீவன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என திமுக முன்னாள் அமைச்சர் பி. கீதா ஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலில் மஞ்சள் நீராட்டு வைபவம்: சுவாமி - அம்மன் வீதியுலா கோலாகலம்!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பேருந்து நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் திருட்டு: சிறுவன் உட்பட 2 பேர் கைது!

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபரிடம் செல்போன் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

லாரி - லோடு வேன் நேருக்கு நேர் மோதல்: தூத்துக்குடி இளைஞர் பலி; ஓட்டுநர் படுகாயம்!

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் லோடு வேனும் மோதிக்கொண்ட கோர விபத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் · KumariOnline