» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

கடையநல்லூர் அருகே கந்துவட்டி கொடுமையால் 100 அடி உயர மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகன் மனைவி லெட்சுமி. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். முருகன் அதே பகுதியைச் சார்ந்த மாரியம்மாள் என்பவரிடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். தற்போது வட்டியும் அசலும் சேர்த்து 9 லட்சம் ரூபாய் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மாரியம்மாள் முருகன் லட்சுமி இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த லெட்சுமி சொக்கம்பட்டி பகுதியில் உள்ள மலையில் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory