» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

தூத்துக்குடியில் டெண்டரை வாபஸ் பெறுமாறு அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து, அவரது தாயாரை 4பேர் கொண்ட கும்பல் மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் சிவில் ஒப்பந்த பணிகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொடர்பாக கடந்த 28ஆம் தேதி டெண்டர் நடைபெற்றுள்ளது.
இந்த டென்டரில் பாலமுருகன் மற்றும் திமுகவை சேர்ந்த டிகேஎஸ் ரமேஷ் மற்றும் சந்தனகுமார், மன்சூர் ஆகிய 4பேர் கலந்து கொண்டுள்ளனர். ரூ.15 லட்சம் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்கு குறைந்த ஒப்பந்த புள்ளியில் பாலமுருகன் ஒப்பந்தம் கோரியுள்ளார். இந்த ஒப்பந்தம் கடந்த 30ஆம் தேதி திறக்கப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர்கள் துணையுடன் வருகிற 9ம் தேதிக்கு எந்தவித காரணமும் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தில் இருந்து வாபஸ் வாங்க வேண்டுமென பாலமுருகனுக்கு திமுகவை சேர்ந்த சில நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் பாலமுருகன் இந்த ஒப்பந்தத்தில் தான் குறைந்த விலைக்கு ஒப்பந்தபுள்ளி கோரி உள்ளேன் எனக்கு இந்த வேலை வேண்டும் நான் வாபஸ் வாங்க மாட்டேன் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று பாலமுருகன் வீட்டிலிருந்து வெளியே சென்று நிலையில் வீட்டில் அவரது தாய் சிவஞானம் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். வீட்டின் உள்ளே இருந்த அவரது தாய் பாலமுருகன் இங்கு இல்லை வெளியூர் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கும்பல் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கே இருந்த பொருட்களை சிதறடித்துள்ளனர். மேலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பாலமுருகன் உடனடியாக விலக வேண்டும் இல்லை என்றால் நடப்பது வேறு என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்தகாரர் பாலமுருகன் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காவுராஜன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன் கூறுகையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியை சேர்ந்த மற்றும் அதிகாரிகளுக்கு பணம் அளிக்கும் சிலர் மட்டுமே ஒப்பந்தம் எடுக்கும் சூழ்நிலை உள்ளது. எங்களைப் போன்று அரசுக்கு லாபம் இட்டு வகையிலும் குறைந்த விலையில் ஒப்பந்த புள்ளி எடுத்து முறையாக தொழில் செய்பவர்கள் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களால் மிரட்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தூத்துக்குடியில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து 4பேர் கொண்ட கும்பல் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
JeorgeSep 4, 2025 - 10:23:23 PM | Posted IP 172.7*****
திமுகவினர் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெர்மல் அதிகாரிகளை கூண்டோடு மாற்றினால் சிறு ஒப்பந்தாரர்கள் பிழைப்பார்கள்.
ரவி மூர்த்திSep 4, 2025 - 09:27:09 PM | Posted IP 162.1*****
திருட்டு திராவிட கும்பலை ஒழிக்க வேண்டும்.
திருட்டு தீமுக ஒழிகSep 4, 2025 - 05:46:27 PM | Posted IP 104.2*****
மக்களே திருட்டு திமுகவுக்கு வாக்களியுங்கள் நாளைக்கு உங்களுக்கு இதுவும் நடக்கலாம். திருட்டுத் திமுக குடும்பங்கள் எல்லாம் பல தலைமுறை கோடி கணக்கான சொத்துக்கள் சேர்த்து வைக்கும், மக்களை நடுத்தெருவில் ஓட்டுக்காக 200 ரூபாய் , 500 ரூபாய் , 1000 ரூபாய் கொடுத்து ரோட்டில் போராட வைக்கும்.
kannanSep 4, 2025 - 04:46:13 PM | Posted IP 162.1*****
அனல்மின் நிலையத்தில் திமுக அராஜகம். கான்ட்ராக்ட் காரனுக்கே பாதுகாப்பு இல்லை. கீதாஜீவன் ஆளுங்க அராஜகம் பெரிகிடுச்சு.
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 51.1 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு : சபாநாயகர் அப்பாவு தகவல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 3:34:38 PM (IST)

கனிராஜ்Sep 4, 2025 - 10:26:46 PM | Posted IP 172.7*****