» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இப்போதாவது இது தவறு என்று உணர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய தவறை உணர்ந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சட்டத்தை அமல்படுத்தியபோது இது தவறு, இது போன்ற பல்வேறு வரிவிகிதங்களை வைக்காதீர்கள் என்று அப்போதே நாங்கள் அறிவுறுத்தினோம்.

அப்போதைய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியமும் இது தவறு என்று அறிவுறுத்தினார். ஆனால் அன்று பிரதமரோ, நிதியமைச்சரோ மற்ற அமைச்சர்களோ நாங்கள் சொன்னதை கேட்கவில்லை. பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். பல பொருளாதார நிபுணர்கள் இது தவறு, இதை திருத்த வேண்டும் என்று கூறினார்கள்.

இப்போதாவது இது தவறு என்று உணர்ந்து இதை திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். 8 ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை கசக்கி பிழிந்தார். இப்போது வரியை குறைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இதே மக்கள் தானே அதே 18% வரியை கட்டிக் கொண்டிருந்தார். இப்போது இந்த 5% வரி பொருந்தும் என்றால் ஏன் இத்தனை ஆண்டுகள் அது பொருந்தவில்லை? மக்களிடம் இருந்த பணத்தை எல்லாம் வரியாக வசூலித்து இப்போதாவது அவர்களுடைய மனம் திருந்தி, அறிவு தெளிந்து தங்களுடைய தவறை திருத்திக் கொண்டதற்கு பாராட்டுகிறேன்” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory