» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007 முதல் 2009 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரியை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2017 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.

தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் விசாரணைக்கு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

அமைச்சர் துரைமுருகன் ஆஜராகாத நிலையில், அவரது மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதையடுத்து, சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிமன்றம், துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை செப். 15 ஆம் தேதி அமல்படுத்த தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory