» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அய்யா வைகுண்டரை அவமதித்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு சரத்குமார் கண்டனம்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:44:16 AM (IST)
அய்யா வைகுண்டரை அவமதித்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நடிகர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி, வளர்ச்சி என்று தமிழக அரசு பெருமை பேசும் சூழலில், தமிழ்நாட்டின் முதன்மை அதிகாரிகளையும், அறிவார்ந்த, திறன்வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் TNPSC தேர்வு நடைமுறையில், பல்வேறு குளறுபடிகளால் அதுவும் எளிய மொழிமாற்றம் கூட செய்வதறியாமல் தவறுதலாக கேள்வி உருவாக்கி இருக்கிறார்கள் என்று சொன்னால், TNPSC தேர்வாணையத்தின் தரத்தின் மீது நம்பிக்கையற்ற மனநிலை ஏற்படுகிறது.
தென் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களின் மனதை இச்செயல் புண்படுத்தியிருக்கிறது. இறைவனை பற்றிய கேள்வியில் ஒரு சரியான விடையும், பல தவறான விடையும் கொடுக்கப்பட்டு இழிவுபடுத்தி உள்ளது மேலும் கண்டனத்திற்குரியது.
தேர்வு தாமதங்கள், முடிவு தாமதங்கள், தேர்வு வினாத்தாள் கசிவு, முறையற்ற தேர்வு நடைமுறைகள் என பல்வேறு குளறுபடிகள் TNPSC - இல் அரங்கேறி வருவது இது முதன்முறை அல்ல, பலமுறை இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்கிறது. உதாரணத்திற்கு முந்தைய குரூப் - 1 தேர்வில் கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 1.அருளப்பன் 2. யோவான் 3. சந்தாசாகிப் 4. சந்நியாசி என பதில் அளித்தும், தேம்பாவணியின் பாட்டுடை தலைவன் யார் என்று கேட்டு அதில் இயேசு, மரியாள், மற்றும் யூதாஸ் பெயர்கள் பதிலுக்கான ஆப்ஷனாக கொடுக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியது.
தொடரும் இந்த TNPSC குளறுபடி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்த்து வைக்க மறுக்கிறது. இந்த அவலங்கள் குறித்த தவறை ஒப்புக்கொண்டு TNPSC மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இனி இதுபோன்ற குளறுபடி நடைபெறாமல் கூடுதல் கவனத்துடன் செயல்பட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:53:27 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)

அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் வீடுபுகுந்து மிரட்டல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:42:06 PM (IST)

இப்போதாவது மனம் திருந்திய மத்திய அரசு : ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:19:10 PM (IST)

இபிஎஸ் முதுகில் குத்தியதாக நான் சொல்லவே இல்லை: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:13:30 PM (IST)
