» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்பதா? அண்ணாமலை கண்டனம்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:21:39 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதற்கு தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை  கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "முடிவெட்டும் கடவுள்" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசு பணிக்கான தேர்வில் பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என்ற கேள்விக்கு, '2024-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, 'பிச்சை எடுத்தார்கள்' என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அரசு பணி தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, தி.மு.க. அரசு இதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory