» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருக்கோளூர் கோவில் ஆவணி திருவிழாவில் கருட சேவை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 8:19:43 AM (IST)



திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழாவையொட்டி நேற்று இரவு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் சுவாமி வைத்தமாநிதி பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இது நவதிருப்பதிகளில் 8-வது தலமாக விளங்குகிறது. ஆனமிக சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு சுவாமி பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நேற்று 5-ம்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 7.30 மணிக்கு திருமஞ்சனமும், காலை 8.30 மணிக்கு நித்தியல் பூஜையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வைத்தமாநிதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

இரவு 7.45 மணிக்கு சுவாமி கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீதரன் ஸ்வாமி, சடகோபன் சுவாமி, நிர்வாக அதிகாரி சதீஷ் உள்பட சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory