» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதி விபத்து: 2 குழந்தைகள், தம்பதியர் படுகாயம்!

ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:32:31 PM (IST)



தூத்துக்குடியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். 

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூர் பாவடி தெருவைச் சேர்ந்தவர்  செல்வராஜ் மகன் குமார் (38), இவரது தனது மனைவி கோமதி (29), மகன்கள் ஆத்விக் (7), நிதர்சன் (6) ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து இன்று காலை சுமார் 7 மணியளவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி - மதுரை பைபாஸ் வழியாக ஸ்டெர்லைட் பாலத்தையடுத்த  ஜோதி நகர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் இருந்த 4பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 4பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory