» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சத்தீஸ்கரில் அருட்சகோதரிகளின் கைதை கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 10:06:02 AM (IST)

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய சென்ற கேரளமாநில அருட்சகோதரிகளை பொய் புகார் கூறி கைது செய்ததைக் கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா இருவரும் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த பழங்குடி இளம் பெண்கள் 3 பேர்கள் செவிலியர் படிக்க வைக்க தேவையான உதவிகளை செய்த நிலையில், அவர்களை ஆக்ரா அழைத்துச் சென்று மதமாற்றம் செய்ய வந்துள்ளதாக பொய் புகார் கூறி எவ்வித முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் சத்தீஸ்கர் மாநில அரசு அருட்சகோதரிகளை கைது செய்து சிறையில் அடைத்தாகக் கூறப்படுகிறது.
இந்த கைதை கண்டித்து நாசரேத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாசரேத்தை சுற்றி உள்ள கத்தோலிக்க சபை மக்கள் தென்னிந்திய திருச்சபை மக்கள் இணைந்து நாசரேத் பேருந்து நிலையம் முன்பு மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்ட முழக்கம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு துரை குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரால்டுரவி தலைமை வகித்தார். பிரகாசபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் நாசரேத் பேராலயத்தின் தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் உதவி குரு தனசேகர் ராஜா மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய போதகர் ஞான சிங் எட்வின். பிரகாசபுரம் சேகர குரு நவராஜ் தென்மண்டல பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரான்ஸிஸ் தென்மண்டல கலப்பை இதழ் ஆசிரியர் அருட்திரு செல்வரத்தினம்.
காமா ஜெபக்குழு ஸ்தாபகர் குருவானவர் சாமுவேல், முன்னாள் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி தாளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நாசரேத் தோப்பூர் மாதவனம். கந்தசாமிபுரம். உடையார்குளம் .பிரகாசபுரம். மூக்குப்பீறி பாட்டக்கரை, ஒய்யான்குடி, வகுத்தான்குளம், வாழையடி உட்பட நாசரேத்தைச் சுற்றுவட்டார கிறிஸ்தவர்கள் சுமார் 1000 பேர் ஒன்று கூடி சத்தீஸ்கர் மாநிலத்தில் பொய் புகார் கூறி கேர்ள் மாநில அருட்சகோதரிகளின் கைது ஜனநாயக வன்செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: 30 பேருக்கு பணி ஆணைகள்!
சனி 30, ஆகஸ்ட் 2025 3:54:19 PM (IST)

குமரியிலிருந்து சாய் நகர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல நேரடி ரயில் இயக்க பக்தர்கள் கோரிக்கை
சனி 30, ஆகஸ்ட் 2025 12:44:37 PM (IST)

காஷ்மீரில் நிலச்சரிவு: குமரியில் இருந்து புறப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:48:10 AM (IST)

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து சேவை: அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:37:11 AM (IST)

வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)

குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி: ஆசாரிபள்ளம் அருகே சோகம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:36:42 PM (IST)

ராபின்Aug 4, 2025 - 06:01:01 PM | Posted IP 104.2*****