» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து சேவை: அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:37:11 AM (IST)



நீரோடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து சேவையை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், நீரோடி பேருந்து நிலையத்தில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ் குமார் முன்னிலையில் துவக்கி வைத்து தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். குறிப்பாக கடற்கரை பகுதிகளில் அதிகளவு கிறிஸ்தவ மீனர்வகள் வசித்து வருகிறார்கள்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று வேளாங்கண்ணி தேவாலய திருத்தலத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். எனவே இத்திருவிழா மற்றும் தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு செல்ல மீனவ கிராம பகுதிகளில் பேருந்து வசதி இல்லை என்பதால் கடற்கரை பகுதி மக்களுக்கு வேளாங்கண்ணிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர். 

அக்கோரிக்கையினை பரிசீலித்து நீரோடி பேருந்து நிலையத்திலிருந்து மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, மஞ்சதோப்பு, நித்திரவிளை, சின்ன துறை, தூத்தூர், பூத்துறை, புதுக்கடை, தேங்காபட்டணம், முள்ளூர்துறை, இராமன்துறை, புத்தன்துறை, இனையம், ஹெலன் நகர், மேல்மிடாலம், மிடாலம், ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன்காலணி, குளச்சல், கொட்டில்பாடு, மணவாளக்குறிச்சி, கடியப்பட்டினம், முட்டம், பிள்ளைத்தோப்பு, அழிக்கால், கல்லுக்கட்டி, ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோவில் சென்று அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 29.08.2025 அன்று அதிகாலை வேளாங்கண்ணி சென்றடையும். 

இப்பேருந்து சேவை வாராவாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நீரோடியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கியும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீரோடி நோக்கியும் இயங்க இருக்கிறது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory