» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விநாயகர் சதுர்த்தி விழா எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:17:58 PM (IST)

தமிழ்நாட்டின் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை கொண்டாட்டத்தை ஒட்டி மலர் சந்தைகளும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் களைகட்டியது. மதுரையின் சிறப்பே மல்லிகை, மல்லிகை கிலோவுக்கு ரூ.600க்கும் அதிகரித்து ரூ.2000க்கும் வரை விற்கப்படுகிறது. பிச்சி ரூ.1200க்கும், முல்லை ரூ.1000க்கும் உள்ளது. 

கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ரூ.400க்கும் இருந்த பிச்சி பூவின் விலை தற்போது ரூ.1000க்கும் ஆக உயர்ந்துள்ளது.

அனைத்து பூக்களின் விலையும் தோவாளை மலர் சந்தையில் உயர்ந்துள்ளது. ஓணம் பண்டிகைக்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து வாடாமல்லி, கோழிக்கொண்டை, செண்டுமல்லி, செம்மங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள், அதிகளவில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இதனால் ரூ.10க்கும் விற்பனையான செண்டுமல்லி தற்போது ரூ.130க்கும், ரூ.20க்கும் இருந்த 1 கிலோ வாடாமல்லி ரூ.250க்கும் விற்கிறது. சங்கரன் கோவில் மலர் சந்தையிலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பண்டிகைகளின் முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுடன், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory