» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினார்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:22:39 PM (IST)

நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலைய ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலைய ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் அறிமுகப்படுத்தி தெரிவிக்கையில்- தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் ஏற்கனவே பாதாம் மிக்ஸ் பவுடர் 200 கிராம் ஜார்களில் உற்பத்தி செய்யப்பட்டு மாதம் ஒன்றுக்கு சுமார் 30000 ஜார்களுக்கு மேலாக உள்ளுர் ஆவின் பாலகங்கள், தலைமை அலுவலகத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள பிற ஒன்றியங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேற்படியான பாதாம்மிக்ஸ் பவுடருக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவதால் நுகர்வோர்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் தற்போது 14 கிராம் பாதாம் மிக்ஸ் பவுடர் சிறிய அளவு பாக்கெட் ரூ.10.00 அதிகபட்ச சில்லறை விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து ஆவின் பாலகங்கள், தலைமை விற்பனை நிலையங்களிலும், தமிழ்நாடு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவினை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆவின் பொது மேலாளர் மகேஷ்வரி, மேலாளர் சகாய ஷீபா, துணை பதிவாளர் (பால்வளம்) சைமன் சார்லஸ், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, வார்டு உறுப்பினர் அனந்த இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் சரவணன், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பூதலிங்கபிள்ளை, காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஆனந்த், வழக்கறிஞர் சதாசிவம், அகஸ்தீஸ்சன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி: ஆசாரிபள்ளம் அருகே சோகம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:36:42 PM (IST)

விநாயகர் சதுர்த்தி விழா எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:17:58 PM (IST)

குமரியில் பாலியல், திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:33:21 PM (IST)

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் பார்களை மூட ஆட்சியர் உத்தரவு
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:25:29 PM (IST)

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:18:03 PM (IST)

ஆவினில் 10 ரூபாய்க்கு பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் அறிமுகம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)
