» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காஷ்மீரில் நிலச்சரிவு: குமரியில் இருந்து புறப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:48:10 AM (IST)
காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு காரணமாக குமரியில் இருந்து இன்று மதியம் 2.15 மணிக்கு புறப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் சேவையை வடக்கு ரயில்வே மாற்றியமைக்க கூறியுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரியில் இருந்து இன்று மதியம் 2.15 மணிக்கு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவுக்கு இயக்கப்படும் வாராந்திர ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16317) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் (16032) ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா - நிஜாமுதீன் இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த ரயில் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிஜாமுதீனில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி புறப்படும்.
அதேபோல், நாளை இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ராவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் (16032) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து சேவை: அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:37:11 AM (IST)

வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)

குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி: ஆசாரிபள்ளம் அருகே சோகம்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:36:42 PM (IST)

ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினார்
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:22:39 PM (IST)

விநாயகர் சதுர்த்தி விழா எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:17:58 PM (IST)

குமரியில் பாலியல், திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:33:21 PM (IST)
