» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு

வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)



பள்ளம்துறையில் ரூ.26 கோடியில் தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடித்துறைமுக வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பள்ளம்துறை பகுதியில் ரூ.26 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடித்துறைமுக வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (13.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்குகென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பள்ளம்துறை கடற்கரை கிராமத்தில் உள்ள மீனவர்கள் முக்கியமாக மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்கின்றனர். 

இக்கிராமத்தில் கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தவும் கடல் அரிப்பின் காரணமாக மீனவர்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதை பாதுகாக்கும் பொருட்டும் இரண்டு எண்ணங்களில் நேர்கள் சுவர்கள் நிறுவப்பட்டுள்ளது. எனினும் பருவ மழை மற்றும் எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுகளை தங்கள் கிராமத்தில் தரையிறக்குவதில் சிரமமான சூழல் நிலவுகிறது. இந்த மீன் இறங்குதளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தொடர் கோரிக்கையானது மீனவ மக்களிடம் இருந்து வந்தது. 

இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் பாதுகாப்பான மீன்பிடி இறங்கு தளமாக மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தையும் அவசரத் தேவையையும் உணர்ந்து, மீன்வளத்துறையின் சார்பில் நபார்டு XXX நிதியின் கீழ் ரூ.26.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கினார்கள். அதனடிப்படையில் தூண்டில் வளைவு-1 -210மீ நீட்டித்தல் (LS.80மீ முதல் LS300மீ) மற்றும் வலைபின்னும் கூடம் 9மீ x 6மீ உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் இம்மீன்பிடி இறங்குதள பணிகள் 20.01.2025 முதல் நடைபெற்று வருகிறது.

தற்போது தூண்டில் வளைவு-1 நீட்டித்தல் பணிகள் மேலும் 8 டன் அளவுள்ள கான்கிரீட் கட்டை அமைக்கும் பணிகள் (Casting of Tetrapod-8T) நடைபெற்று வருகின்றது. வலை பின்னும் கூடம் அமைக்கும் பணியில் மேற்கூரை கான்கிரீட் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு மேலும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த தூண்டில் வளைவு நீட்டிப்பு பணியின் முன்னேற்றம் குறித்து தறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் 30.06.2025-க்குள் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்து மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பள்ளம்துறை பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்களான மீன் ஊறுகாய், சங்கு கைவினைப்பொருட்கள், வலை தயாரிக்கும் பணி, தையல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வில் மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், உதவி இயக்குனர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory