» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)
நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 1 முதனிலை (TNPSC GROUP I PRELIMS) தேர்வானது ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாணவர்கள் இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் 14.03.2025 அன்று இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பானது, நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Material) இலவசமாக வழங்கப்படும். இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு 25 மாதிரித்தேர்வுகள் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 12, மார்ச் 2025 4:56:48 PM (IST)
