» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
புதன் 12, மார்ச் 2025 3:38:27 PM (IST)
இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகர்கோவில் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, வெள்ளாளபுரம் ஊராட்சி, புதுகுடியானூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி (50) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தாரமங்கலம், காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)
