» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)
நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது 19-12-2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 19-12-2025 அன்று காலை 10.00 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

