» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!

திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

இரணியல் அருகே ஏழு நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அழுகிய ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

குமரி மாவட்டம்  இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரங்காடு, மொட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் பச்சைமால். இவரது மகன் தர்மலிங்கம் (51). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தர்மலிங்கத்தின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தர்மலிங்கம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். உடல் புழுக்கள் அரித்து, துர்நாற்றம் வீசியதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மருத்துவ அணிச் செயலாளர் அசார் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சடலத்தை மீட்டு, தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தர்மலிங்கம் உயிரிழந்து சுமார் ஏழு நாட்கள் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory