» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!

வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

களியல் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியின் மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே கட்டச்சல் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன்  நடவடிக்கையால் மூடப்பட்ட நிலையில் செயல்படாமல் இருந்த கல்குவாரி,குமரியை சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் மூலம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. 

பாறைகள் உடைக்க அனுமதி இல்லாத நிலையில் சட்ட விரோதமாக பாறைகள் உடைப்பதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கல் குவாரியில் அதிரடியாக நடத்திய சோதனையில் குவாரி மேற்பார்வையாளர் ஸ்டாலின் என்பவரை கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கடையாலுமூடு காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory