» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)



திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பேச்சிப்பாறை ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள், பொன்மனை மற்றும் திற்பரப்பு தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (17.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதனடிப்படையில் ஊரகப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் எனவும் அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட 15 குக்கிராமங்களில் உள்ள 156 மலைவாழ் மக்களுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கலைஞர் கனவு இல்லம் திட்ட நிதியிலிருந்தும், ரூ.1.00 இலட்சம் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்தும் மொத்தம் ரூ.4.50 லட்சம் வீதம் ரூ.7.02 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டமைப்புகள், அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகளின் தரம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. இந்த வீடுகளுக்கான பணிகளில் 8 வீடுகளின் பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள வீடுகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணிகளை விரைவில் முடித்து பயனாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து பயனாளிகளிடம் கட்டுமான பணிகளை தொய்வின்றி செய்ய அறிவுறுத்தப்பட்டது. வரும் ஜனவரி மாத காலத்திற்குள் வீடு கட்டும் பணியினை முடித்திடவும், இப்பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடவும் வீட்டின் பயனாளிகள் மற்றும் துறை அலுவலர்களுக்கு கேட்டுகொள்ளப்பட்டது. மேலும் கொடுத்துறை குக்கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல பயனாளி வசந்தா என்பவரது இல்லம் குடிபுகுதல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும் திற்பரப்பு தேர்வுநிலை பேரூராட்சி, தும்பகோடு பேருந்து நிலையம் இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டம் 2025-26ன் கீழ் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்ய அனுமதி பெறப்பட்டு, வேலை உத்தரவு 22.08.2025 அன்று வழங்கப்பட்டுள்ளது. இப்பணி முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து பொன்மனை தேர்வு நிலை பேரூராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025 ன் கீழ் ரூ.94 இலட்சம் மதிப்பில் வெக்காலிமூடுமலையில் திறந்தவெளி கிணறு மற்றும் 100000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி வனஅலுவலரின் தடையின்மை சான்று பெறப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வேலை துவங்கப்பட்டு திறந்தவெளி கிணறு 30 அடி ஆழம் வரை தோண்டும் பணி முடிவடைந்தது. மேலும் மேல்நிலைநீர்தேக்க தொட்டி அமைக்க மண்தோண்டும் பணி முடிவடைந்துள்ளது. ஆய்வின் போது வேலை மேற்கொள்ளப்படாமல் இருந்ததால், ஒப்பந்தகாரரிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கை பெற்று சமர்ப்பிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.. 

ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, செயல் அலுவலர், மாவட்ட திட்டக்குழு அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தா.ரா.ராஜேஷ்குமார் (வட்டார ஊராட்சி), த.சசி (கிராம ஊராட்சி), உதவிப்பொறியாளர்கள் A.ஜினு ஆன்றணி மற்றும் J.ஜெனி, கிறைஸ்ட் ஜெஸ்டின்ராஜ், பணிமேற்பார்வையாளர்கள், ஜோஸ் பிராங்கிளின், இளநிலைபொறியாளர், பணிமேற்பார்வையாளர், மற்றும் ஒப்பந்ததார், துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory