» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்

வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கன்னியாகுமரி மாவட்டம், தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்டுள்ள ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.   

1. மருத்துவ அலுவலர்  - 5 பணியிடங்கள்

2. செவிலியர் - 5 பணியிடங்கள்

3. பல்நோக்கு சுகாதார பணியாளர் (Health Inspector Grade - II) - 5 பணியிடங்கள்

4. மருத்துவமனை பணியாளர் - Support Staff ) - 5 பணியிடங்கள்

இப்பணியிடங்களினை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள்,  இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை  கன்னியாகுமரி மாவட்டத்தின் www.Kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  24.03.2025 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில்,  நாகர்கோவில்-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory