» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

குமரி மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.2000 கோடி ஒதுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

இயற்கை எழில் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றிட மத்திய அரசு முன் வரவேண்டும். அதற்காக சிறப்பு நிதியாக ரூபாய் 2000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மக்களவையில் 377 ஆம் விதியின் கீழ் இந்த முக்கியமான கோரிக்கையை வைத்த விஜய் வசந்த் : கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம். மிக தெளிவான கடற்கரைகள், விண்ணை எட்டி நிற்கும் மலைகள், அருவிகள், நீர் நிலைகள் என்று கண் கவர் இயற்கை எழிலை கொண்டது எங்கள் மாவட்டம். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற உலக புகழ் வாய்ந்த சுற்றுலா மையங்கள் இங்குள்ளது. 

கடந்த வருடம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 50, 000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குமரிக்கு வருகை தந்துள்ளனர். ஆனால் இத்தகைய பெரும் கூட்டத்தினை எதிர் கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் இங்குள்ள சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. மேலும் சுற்றுசூழலை மேம்படுத்தவும், பாரம்பரிய மற்றும் இயற்கை தளங்களை பாதுகாக்கவும் வேண்டியது கட்டாயம்.

கன்னியாகுமரி மாவட்டம் மேம்படுத்தப்பட்ட ஒரு சுற்றுலா தலமாக மாறுவதன் மூலம் இங்குள்ள மக்களும், சிறு குறு வணிகர்களும் பயனடைந்து, வேலை வாய்ப்பினையும் பெருக்க இது காரணமாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கன்னியாகுமரியின் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ப்ரேத்யேக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் இதற்காக ரூபாய் 2000 கோடியினை சிறப்பு நிதியாக ஒதுக்கி உலக சுற்றுலா வரைபடத்தில் குமரியை இடம் பெற செய்ய ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory