» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)



இராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல வீடுகள் கட்டபட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சிஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் (KKI) 2024-25 கீழ் கட்டப்பட்டுள்ள வீடு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைந்திட வீட்டின் பயனாளி மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கும் குப்பை மக்கா குப்பைகள் என உரிய முறையில் தரம் பிரித்து, உரம் தயாரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பணியாளர்கள், பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory