» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி ஐந்தினை பூங்காவில் கால்பந்து மைதானம் அமைக்க கூடாது : சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
வியாழன் 13, பிப்ரவரி 2025 10:35:03 AM (IST)

தூத்துக்குடி பாளைரோட்டில் ஐந்தினை பூங்காவை கால்பந்து மைதானமாக மாற்றக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.57.10 கோடி மதிப்பீட்டில் மானுடவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா ஆகியவை ஒரே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களை கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதில் ஐந்திணை என்பது தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற 5 பிரிவு நிலம் மற்றும் மக்களின் வாழ்வியல் குறித்த சிலைகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பூங்கா திறப்புவிழா கண்ட சில நாட்களிலேயே பூங்கா மூடப்பட்டது. பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் அருகே பாேக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து விதிகள் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து காெள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை தற்போது மகளிர் பூங்காவாக மாற்றியுள்ளனர். மேலும் தற்போது ஐந்திணை பூங்காவை கால்பந்து மைதானமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் சிவராம் என்பவர் கூறுகையில், தூத்துக்குடியில் பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ள ஐந்திணை பூங்காவை கால்பந்து மைதானம் மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்பந்து மைதானம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனினும், ஐந்திணை பூங்காவை மாற்றாமல், கால்பந்து மைதானத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
கேபாFeb 13, 2025 - 09:27:53 PM | Posted IP 172.7*****
இளைஞர்கள் பல்வேறு நலங்களை விளையாட்டின் மூலம் பெற்றுக் கொள்வார்கள்
தமிழன்Feb 13, 2025 - 01:19:20 PM | Posted IP 172.7*****
இதுபோன்று நகரின் பல இடங்களில் வணிக வளாகம் கட்டப்பட்டு மாநகராட்சியின் அதிகப்படியான வாடகையால் கடைகள் திறக்கப்படாமல் அதற்கு செலவு செய்த நிதி வீணாவதோடு கடைகள் மூடி கிடக்கின்றன .குறிப்பாக சத்திரம் தெரு,முத்துநகர் கடற்கரை,ரோச் பார்க் கடைகள் வீணாகிக்கொண்டு இருக்கின்றன.
இதுFeb 13, 2025 - 01:13:51 PM | Posted IP 162.1*****
ஆட்டைய போட வா ?
ராஜாFeb 13, 2025 - 12:08:28 PM | Posted IP 172.7*****
மானுடவியல் பூங்காவை பரமாரித்து பொதுமக்களுக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
podhu janamFeb 13, 2025 - 11:10:55 AM | Posted IP 172.7*****
Mayor and political parties need alteration / new contracts to build-up party's wealth.
கனிராஜ்Feb 13, 2025 - 10:45:17 AM | Posted IP 162.1*****
நல்ல செய்தி. வரிப்பணம் வீண்
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

JeorgeFeb 14, 2025 - 01:03:45 AM | Posted IP 162.1*****