» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவில்பட்டியில் பிப்.15ல் புதிய சந்தை திறப்பு விழா : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

புதன் 12, பிப்ரவரி 2025 5:26:27 PM (IST)

கோவில்பட்டியில் ரூ.6.87கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையை வருகிற 15ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு  திறந்து வைக்கிறார்.

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்   அமைச்சர்  பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையானது மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்ததால், அதை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. 

இந்த முடிவின்படி கலைஞர் மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொது நிதி ரூ.6.87கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடப் பணிகள் துவக்கப்பட்டன. தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தையானது சுமார் 157 கடைகளைக் கொண்டிருக்கிறது. 

புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பி. கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  இளம் பகவத்  ஆகியோர் முன்னிலையில்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என். நேரு  திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

Ramaraj. KFeb 14, 2025 - 08:13:09 PM | Posted IP 162.1*****

Good news

ShenpahamurthiFeb 14, 2025 - 02:09:26 PM | Posted IP 162.1*****

Excellent

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory