» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் குட்கா கடத்திய வாலிபர் கைது: ரூ.3½ லட்சம் பணம் பறிமுதல்!

புதன் 12, பிப்ரவரி 2025 8:12:28 AM (IST)



தூத்துக்குடியில் மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ புகையிலை மற்றும் ரூ.3½ லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த மொபட்டில் வந்த வாலிபரை தடுத்துநிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த 3 சாக்குப்பைகளை சோதனை செய்தனர். 

அப்போது அதில், 40 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததும், அவற்றை அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும், ஒரு சாக்குப்பையில் ரூ.3½ லட்சம் பணமும் இருந்தது. அந்த பணத்தையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், முத்தம்மாள் காலனியை சேர்ந்த முருகையா மகன் வயனபெருமாள் (37) என்பதும், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அவர், கடைகளில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரையும், பறிமுதல் செய்த பணம், புகையிலை பொருட்களை சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

சண்முகராஜ்Feb 13, 2025 - 04:28:06 PM | Posted IP 172.7*****

குயிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அரிய ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory