» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:58:40 AM (IST)

தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 2-ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அடைக்கப்படவில்லை. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கால சந்தி பூஜை, விளா பூஜை, சுப்பிரமணிய பூஜை நடந்தது. இதையடுத்து கோ ரதத்தில் விநாயகர் பெருமானும், சட்ட ரதத்தில் சுவாமி கழுகாசல மூர்த்தி, வள்ளி. தெய்வானை அம்மன்களுடன் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் விருதுநகர், சிவகாசி, மதுரை, ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)
