» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் நடைபாதையில் உள்ள கடையை அகற்ற வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை!!

திங்கள் 10, பிப்ரவரி 2025 3:35:05 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜின் பேக்டரி சாலையைச் சேர்ந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் சுகம் ஹோட்டல் எதிர்புறம் பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைக்கு செல்வதற்காக கூடுவர். 

இந்நிலையில் வியாபாரிகளை பாதிக்கும் வகையிலும் நடைபாதையில் மாநகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பை உருவாக்கும் வகையில் அந்தப் பகுதியில் தனிநபர் ஒருவருக்கு கடை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கி உள்ள கடை அருகே உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்ம் அமைந்துள்ள பகுதி அருகே அமைந்துள்ளது இதன் காரணமாக மின் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த கடை மூலம் தங்களது வியாபாரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். விதிமுறைகளை மீறி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கடையை அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


மக்கள் கருத்து

tuticorianFeb 10, 2025 - 11:15:11 PM | Posted IP 172.7*****

Shops have encroached more than 10 ft on the Coronation theatre road causing much traffic congestion to the market goers. Kindly take necessary action

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory