» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கார் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 10, பிப்ரவரி 2025 12:51:03 PM (IST)
தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதிய விபத்தில் ஜவுளிக் கடை பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மனைவி புஷ்பராணி (43). இந்த தம்பதிக்கு ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பொன்ராஜ் இறந்து விட்டார். புஷ்பராணி தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக முள்ளக்காடு பேருந்து நிறுத்ததிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
திருச்செந்தூர் மெயின் ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது, தெற்கிலிருந்து மேற்காக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த புஷ்பராணி, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

கந்தசாமிFeb 10, 2025 - 01:37:56 PM | Posted IP 172.7*****