» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை!!

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:21:07 AM (IST)

திருச்செந்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஒரு கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமானின் படை வீடு அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்க  கடலோரம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும்.

இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். மேலும் தைப்பூசம் விசாகம் மாசிதிருவிழா பங்குனி உத்திரம் கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாவின் போதும் பல லட்சகணக்கான மக்கள் வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பல நூற்று கணக்கான பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. 

திருச்செந்தூரில் இரண்டு பேருந்து நிலையங்கள் இயங்கி வந்த நிலையில் நகருக்குள் அதிக அளவிலான போக்குவரத்து நெருக்கடியால் வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் பகத்சிங் பேருந்து நிலையத்தில் தான் நிறுத்தப்படுகிறது எனவே இப்பேருந்தானது கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

குறிப்பாக இன்று திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்குள் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்ற நிலையில் பல பேருந்துகள் உள்ளே வர முடியாமலும் உள்ளே நின்ற பேருந்துகள் வெளியே செல்ல முடியாமலும் சிக்கியுள்ளது.  மொத்தம் 12 பேருந்துகள் நிற்கும் அளவிற்கே பேருந்து நிலையம் உள்ள நிலையில் ஆனால் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்பதால் நெருக்கடி உருவாகியுள்ளது எந்த பேருந்து எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை. 

மேலும் ஆம்னி பேருந்துகள் மினி பேருந்துகள் நிற்பதற்கும் இடம் இல்லை. எனவே எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருச்செந்தூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம். திருச்செந்தூரை திருப்பதிக்கு நிகராக மாற்றப்படும் என அரசு அறிவித்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் பரிசீலனை செய்ய வேண்டும்.  எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


மக்கள் கருத்து

செய்யதுஉமர்Feb 12, 2025 - 10:48:56 PM | Posted IP 162.1*****

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எப்போதும் கூட்டநெரிசலாகவே உள்ளது எனவே மேலும் ஒரு ரயில் சேவையை சென்னை விழுப்புரம் திருச்சி மதுரை திருநெல்வேலி வழியாக விடவேண்டும் மேலும் முன்னால் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை TO கண்ணியாகுமரிக்கு மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் சேவை நடைபெறும்

premFeb 11, 2025 - 09:08:13 AM | Posted IP 172.7*****

very good , nice initiative. let us hope . bring to Government attention

C selvamFeb 10, 2025 - 02:14:08 PM | Posted IP 172.7*****

🌾🌾🌾 ராஜா சார் உங்களோட முயற்சிக்கு வெற்றியுடன் அமைய வாழ்த்துகிறேன் கண்டிப்பாக இரண்டு பேருந்துகள் தேவைப்படுது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் யூஸ்புல்லா இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory