» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கணினி பட்டா கேட்டு மனு அளித்த மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 10:58:44 AM (IST)



தூத்துக்குடியில் கணினி பட்டா கேட்டு மனு அளித்த பொது மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் வாக்குறுதி அளித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கிரைய பத்திரம் வைத்திருந்து வீட்டு உரிமையாளர் பெயரில் கணினி பட்டா பெறாமல் வீடு வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யாமல் இருப்பவர்களுக்கு கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இதில் மீளவிட்டான், சங்கரப்பேரி, முத்தம்மாள் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கிருஷ்ணராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கணினி பட்டா கேட்டு அமைச்சர் கீதா ஜீவனிடம் மனு அளித்தனர். பொதுமக்கள் பட்டா கேட்டு வழங்கிய மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்து உடனடியாக கணினி பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

தாங்கள் நீண்ட நாட்களாக தாலுகா அலுவலகம், மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளோம் ஆனால் தாங்கள் பட்டா எப்படி வாங்குவது என தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தோம். இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் அமைச்சர் கீதா ஜீவனிடம் கணணி பட்டா கேட்டு மனு அளித்தோம் உடனடியாக தங்களுக்கு கணணி பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததற்கு பொதுமக்கள் மனதார நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன், திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வழக்கறிஞர் நாகராஜ், நேர்முக உதவியாளர் ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

VijayakumarFeb 9, 2025 - 07:05:56 PM | Posted IP 162.1*****

People are waiting from morning without food. I have seen many fights also going on. Instead of scheduling like this request to schedule this things in each area in seperate dates. Almost more than 1000 peoples are gathering in same date

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory