» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலை வசதி வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை : மேயர் ஆய்வு!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:22:55 PM (IST)
தூத்துக்குடியில் சாலை வசதி வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் வைத்து நடைபெற்ற முகாமில் சாலை வசதி வேண்டி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக நான்கு மண்டலங்களிலும் அதற்கான பணிகள் ஆரம்பமாகப் போகும் பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து ஆரம்பிக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, பகுதி சபா பிரதிநிதி ஆர்தர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
MURUGANSep 7, 2024 - 10:26:11 AM | Posted IP 162.1*****